பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் ஆளுங்கட்சிக்கு பயம் - இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை. எங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் சொன்னார். அதிமுக கூட்டணிக்குள் விரிசல் ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
Tags :



















