மதுரை அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு எதிரொலியாக அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் அதிகாரிகளால் தோ்வு செய்யப்பட்டுள்ளன.இந்த இடத்தில் அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அரங்கம் அமைப்பதற்காக விரிவாக திட்ட அறிக்கை தயாரித்து சமர்பிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடப்பட்டுள்ளது. 4 மாதத்தில் அறிக்கை அளிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் உத்திரவிட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வரும் ஆண்டில் தொடங்க வாய்ப்புள்ளது.
Tags : A grand jallikattu arena near Alankanallur, Madurai