தனியார் - அரசு என அனைத்து வங்கிகளும் மனிதநேயத்தோடு கடனை வசூலிக்க வேண்டும்

பாராளுமன்ற மக்களவையில் இன்று பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “சில வங்கிகள் எவ்வளவு இரக்கமின்றி கடனை திருப்பி வாங்குகின்றன என்பது பற்றிய புகார்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தனியார் - அரசு என அனைத்து வங்கிகளுக்கும் கடன் திருப்பி வசூலிக்கும்போது கடுமையான நடத்தை மேற்கொள்ளப்படுவது அனுமதிக்கப்பட மாட்டாது. வாடிக்கையாளர்களை துன்புறுத்தும் ஏஜென்ட்கள் பணியமர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மனிதநேயத்தோடும், மனதில் சென்சிடிவிட்டியோடும் இவ்விஷயத்தை அணுக வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Tags :