ஆர்.என்.ரவி மனம் மாறுவாரா? திருமாவளவன்
சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மாணவன் ஜெகதீஸ்வரன் (19 வயது) நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மாணவனின் தந்தை செல்வசேகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் இனியாவது மாறுமா? நீட் மசோதாவை அங்கீகரிக்க மாட்டேன் என்று ஆணவத்தோடு ஆளுநர் ரவி பேசியுள்ளார். ஆளுநர் ரவி தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Tags :



















