இடிந்து விழுந்த சிவன் கோயில் - 9 பேர் பலி

by Staff / 14-08-2023 02:21:50pm
இடிந்து விழுந்த சிவன் கோயில் - 9 பேர் பலி

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் சிவன் கோயில் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. சிவன் கோயிலுக்கு 50 பேர் வரை வந்து வழிபட்டனர். இந்த நிலையில், நிலச்சரிவு காரணமாக அவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via