தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. - உதயநிதி ஸ்டாலின்.

by Editor / 18-02-2025 11:11:03pm
தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. - உதயநிதி ஸ்டாலின்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்றுப் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தித் திணிப்பு போராட்டத்தில் அதிமுக அரசியல் செய்யாமல், அவதூறு பரப்பாமல்; எங்களோடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்; குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியை ஏற்றுக் கொண்ட பல மாநிலங்கள் தங்கள் தாய் மொழியை இழந்து நிற்கின்றன. நாங்கள் மத்திய அரசிடம் கேட்பது எந்த நிதி என்று அவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? எங்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள் கட்டிய வரியைத் தானே கேட்கிறோம்; அதைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறது? எங்களை மிரட்டி ஒருபோதும் பணிய வைக்க முடியாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் வளர்த்த சுயமரியாதை மண் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Tags : தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. - உதயநிதி ஸ்டாலின்.

Share via