தமிழகம் முழுவதும் புதிய காய்ச்சல்

by Staff / 15-09-2022 11:07:19am
தமிழகம் முழுவதும்  புதிய காய்ச்சல்


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எழும்பூர் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் இன்று சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 282 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பிறகு தற்போது மீண்டும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். ஆகையால் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்!

 

Tags :

Share via

More stories