இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்த வசதி இல்லாததால் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்-சுந்தர்ராஜன்.

by Editor / 10-09-2023 10:37:18am
இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்த வசதி இல்லாததால் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்-சுந்தர்ராஜன்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 5ஆம் தேதி வந்திருந்தார் அவரிடம் ஆய்க்குடி பேரூராட்சியின் தலைவர் சுந்தர்ராஜ் கோரிக்கை மனு ஒன்றினை அழிக்கின்றார் அந்த மனுவில் தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தேர்வுநிலை தேர்வு ஆட்சியானது ஆய்க்குடி அகர கட்டு அனந்தபுரம் மற்றும் கம்பளி ஆகிய நான்கு கிராமங்களை கொண்ட வளர்ந்து வரும் பேரூராட்சியாகும் பேரூராட்சியில் 615 வீடுகள் உள்ளது 2018 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15ஆயிரத்து 129 மக்கள் தொகை உள்ளது என்றும் 25 ஆயிரத்திற்கும் மேல் அதிகமான மக்கள் தொகை தற்போது உள்ளதாகவும் பேரூராட்சியில் வருமானம் ஈட்டுவதற்கு வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் சந்தை, ஏதும் இல்லை என்றும் பேரூராட்சியினுடைய சொந்த வருவாய் என பெருக்கிடும் வகையில் ஆய்க்குடி மெயின் ரோடு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தினை பேரூராட்சிக்கு ஒப்படைக்கவும், மேலும் பேரூராட்சி பகுதியில் அதிகமான இளைஞர்கள் உள்ளனர் ஆனால் இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் பொழுது போக்கு வசதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர் எனவே இளைஞர்கள் விளையாட்டு மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஆய்க்குடி 13-வது வார்டு மெயின் ரோடு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக விளையாட்டு மைதானம் ஒன்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவும், அதற்கான தொகையினை ஒதுக்கீடு செய்வதற்கு ஆவணம் செய்யும்படியும்அந்தமனுவில்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via