தேர்தலை புறக்கணிப்பதாக கருப்பு கொடியுடன் போராட்டம்
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 1994-ல் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டாவை தனிநபர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கையில் கருப்புக்கொடி ஏந்தியும் கிராம மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
Tags :



















