திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்" இபிஎஸ்

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதிவில், "சேலம் மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு. ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? மாணவச் செல்வங்களே. திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்" என்றார்.
Tags :