3 கூரை வீடுகள் தீயில் நாசம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி

by Staff / 23-09-2022 03:22:20pm
 3 கூரை வீடுகள் தீயில் நாசம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி


தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஊராட்சியில் தட்சன் இருப்பு தெருவில் வசிப்பவர் ஜெயராமன் வயது (80) விவசாயி. இவர் தனது கூரை வீட்டில் தண்ணீரை சுட வைப்பதற்கு அடுப்பில் வைத்துவிட்டு வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள சக்திவேல் (45), கணேசன் (75), ஆகியவரின் வீடுகளுக்கும் தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த உணவுப் பொருட்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த பொருட்களின் சேதம் மதிப்பு 1. 50 லட்சம் ஆகும். தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, மண்டல துணை தாசில்தார் பிரியா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், மற்றும் பலர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo