பாஜகவுக்கு இந்தியா என்ற பெயர் கசக்கிறது - முதல்வர்

by Staff / 05-09-2023 04:20:36pm
பாஜகவுக்கு இந்தியா என்ற பெயர் கசக்கிறது - முதல்வர்

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான தீர்மானத்தை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு முன்மொழியலாம் என தகவல் வெளியானது. இதுகுறித்து (X) ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ''பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்" என பதிவிட்டுள்ளார்.


 

 

Tags :

Share via