ராக்கெட் மாதிரியை திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை அதிகாலை விண்ணில் பாய இருக்கும் விண்கலத்தின் மாதிரிக்கு ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நாளை காலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி.52 ராக்கெட் மூலம் இ.ஓ. எஸ் 04 விண்கலத்தை ஆந்திராவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பூமியை கண்காணிக்க விண்ணில் செலுத்தப்பட இருக்கும் இ.ஒ.எஸ் 04 செயற்கைக்கொள் 1780 கிலோ எடை கொண்டது.
பி.எஸ்.எல்.வி.சி 52 ராக்கெட் மற்றும் இ.ஒ.எஸ். 04 ஆகியவற்றின் மாதிரிகளுடன் திருப்பதி திருமலைக்கு வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அப்போது ராக்கெட் மாதிரி ஏழுமலையான் பாதங்களில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்தியாவின் செயற்கைக் கோள்களுடன் மேலும் 2 சிறிய செயற்கை கோள்களும் நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
Tags :