மனைவியை தாக்கிய கணவர் கைது.

மதுரை செல்லூர் நாயக்கமார் தெருவை சேர்ந்த மணிகண்டன் (50) என்பவர் மனைவி முருகேஸ்வரி (47). கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு மனைவி பிரிந்து சென்று தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 17-வது தெருவில் மணிகண்டன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் ரூ50 ஆயிரம் தருமாறு கேட்டு தகராறு செய்தார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரை தாக்கி காயப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் முருகேஸ்வரி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Tags :