ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

by Admin / 14-12-2025 12:44:50pm
 ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாதிகள் நடத்திய  திடீர் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் பல்மைரா பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாதிகள் நடத்திய ஒரு திடீர் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் (இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்கமொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதற்குமிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சபதம் செய்துள்ளார். 2025, டிசம்பர் 13 சனிக்கிழமை அன்று, சிரியாவின் பல்மைரா நகருக்கு அருகே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மற்றும் சிரியப் படைகள் மீது ஒரு தனிநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்..இந்தத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும்  ஒர் அமெரிக்க  மொழி பெயர்ப்பாளரும் கொல்லப்பட்டாா்..   மேலும்  மூன்று   வீரர்கள் காயமடைந்தனர். கொல்லப்பட்ட வீரர்கள் அயோவா நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தாக்குதல் நடத்திய நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்  என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.  அந்த நபர் "கூட்டுப் படைகளால் அங்கேயே  சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவம் குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், "இது அமெரிக்கா மற்றும் சிரியா மீது நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல். இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார் .2024-ல் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட முதல் உயிரிழப்புத் தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க விமானப்படை விமானங்கள் சிரியாவின் வான்பரப்பில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

 

Tags :

Share via

More stories

Logo