தமிழக வெற்றிக்கழகத்தில் கட்சிக்குள் சில அதிருப்திகளும் உட்கட்சி பூசல்களும் நிலவி வருவதாக தகவல்.

by Admin / 14-12-2025 02:58:09pm
தமிழக வெற்றிக்கழகத்தில் கட்சிக்குள் சில அதிருப்திகளும் உட்கட்சி பூசல்களும் நிலவி வருவதாக தகவல்.

தமிழக வெற்றிக்கழகத்தில் கட்சிக்குள் சில அதிருப்திகளும் உட்கட்சி பூசல்களும் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக தொண்டர்கள் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒரு தரப்பு தொண்டர்கள் மற்றும் சமூக வலைத்தள கருதுகோளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் ..அவர் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை சரியாக மதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த செப்டம்பரில் கரூரில் நடந்த பொது கூட்டங்களில் 41 போ் உயிரிழந்த சம்பவம் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்திற்கு பிறகு கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவிய குளறுபடிகள் காரணமாக தலைமை மீது சில நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ,திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி தொகுதியைச் சேர்ந்த த.வெ.கதொண்டர்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக பனையூரிலுள்ள கட்சி தலைமகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் ..விஜய்க்கு நெருக்கமானவர்கள் மற்றும் நீண்ட கால ஆதரவாளர்களில் சிலர் கட்சி நிர்வாகத்தின் நிலவும் அணுகுமுறை பிடிக்காமல் விலகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. விஜயின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பி.டி செல்வகுமார் சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது .,.அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் கட்சியில் இணைந்து உள்ளது. . கட்சிக்குள் புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க  துணை செய்யும் என்று சொல்லப்படுகிறது. .கட்சித் தலைமை இந்த சிக்கல்களை களைவதற்காக தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தனித்தனி குழுக்களை அமைத்துள்ளது.  இதனிடையே இன்று முதற்கட்ட பட்டியல் வெளியாகும் என்று தகவல்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில். பொதுச்செயலாளர் புசிய ஆனந்த் முறைப்படியாக வேட்பாளர்களை தலைவர் விஜய் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் ஆனந்திற்கும் ஊடகப் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாகவும் அது அதிகார மோதலாக கூட உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்.

 

 

Tags :

Share via