சென்னை விமான நிலையத்திற்கு 3 ஆவது இடம்..

by Staff / 25-04-2024 02:32:31pm
சென்னை விமான நிலையத்திற்கு 3 ஆவது இடம்..

மக்கள் பலரும் குறைந்த நேரத்தில் பயணம் செய்ய விமானங்களையே தேர்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விமான நிலையங்களில் செய்து கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், அதிகமான விமான பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3ஆவது இடத்தில் இருப்பதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். மும்பை மற்றும் டெல்லி ஆகியவை முதல் இடங்களைப் பிடித்துள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் நடப்பாண்டில் மட்டும் 2.12 கோடி பயணிகளை கையாண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via