மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

by Editor / 03-12-2024 02:28:36pm
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தலா ரூ.2,000 நிவாரணம்

 சேதமடைந்த குடிசைகளுக்கு தலா ரூ.10,000 நிவாரணம்

 இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

 சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம்

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 நிவாரணம்

மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 நிவாரணம்

 எருது, பசு, கால்நடை உயிரிழப்புகளுக்கு ரூ.37,500 நிவாரணம்

. வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும்

கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

 

Tags : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Share via