திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

by Editor / 30-12-2024 12:13:44am
திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். பேட்டரி கார் மூலம் கோவில் முகப்புக்கு சென்ற அவர் திருச்செந்தூர் கடலில் கால் நனைத்து விட்டு தரிசனம் செய்தார். 

அங்கு சண்முகவிலாஸ் மண்டபத்தில் அவருக்கு பிரசாத தட்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து துர்கா ஸ்டாலின் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றும் அவர் வழிபாடு நடத்தினார்.

முன்னதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திருச்செந்தூர் கோவில் மூலவர் சண்முகர், வள்ளி, தெய்வானை சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

 

Tags : திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

Share via