நிற்காமல் சென்ற பேருந்திலிருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம்.

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த நடுப்பட்டியில் அரசு உயர்நிலைபள்ளி ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் 7ம் வகுப்பு படித்து வந்தார். இன்று மாலை பள்ளி முடிந்து பஸ்நிறுத்தம் வந்தவர் திருச்சியிலிருந்து - திண்டுக்கல் நோக்கி சென்ற பேருந்தில் ஏறி கல்பட்டி என்ற ஊரில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், கல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் செல்லவே, திடீரென பேருந்தில் இருந்து குதித்துள்ளார். இதில், மாணவன் தலை, கை மற்றும் காலகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு மாணவன் சிகிச்சை பெற்று வருகிறார் . சம்பவம் நடந்த உடனேயே பொதுமக்கள் ஆவேசமாக பேருந்தை நோக்கி ஓடி வருவதை அறிந்த ஓட்டுனரும், நடத்துனரும் பொதுமக்களிடம் சிக்காமல் சம்பவ இடத்திலிருந்து தப்பி,தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : மாணவன்