மத்திய அரசின் இந்தி திணிப்பு: இபிஎஸ் கண்டனம்

by Staff / 01-07-2024 05:12:41pm
மத்திய அரசின் இந்தி திணிப்பு: இபிஎஸ் கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் தள பதிவில், “இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனதிற்குரியது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்ற நிலையில் மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via