களத்தில் குதித்தார் அதிமுக வேட்பாளர்-தீவிர வாக்குசேகரிப்பு

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அதிமுக வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக வின் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில் இரட்டு இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் ஆகியோருடன் மணல் மேடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முதலில் அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு அதன் பின்னர் வீதி வீதியாக வாக்கு கேட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதுவரை தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனுவை ஏற்பதற்கான கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளராக தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
Tags :