நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் இல்லை - விஜய்

அரசியலில் நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் தவெக 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய அவர், மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அனைவரும் ஏற்பார்கள். அரசியலில் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்று தெரியாது. என்னை எப்படி வீழ்த்தலாம் என குழப்பத்தில் உள்ளார்கள். நமது மாவட்ட நிர்வாகிகள் இளைஞர்களாகவே இருக்கிறார்கள் என குற்றச்சாட்டு உள்ளது. இருந்தால் என்ன? இளைஞர்கள் வரலாறு படைத்துள்ளார்கள் என்றார்.
Tags :