சித்தப்பாவின் காதல் டார்ச்சர்... இளம்பெண் கழுத்தறுத்து கொலை

by Staff / 19-03-2023 01:47:45pm
சித்தப்பாவின் காதல் டார்ச்சர்... இளம்பெண் கழுத்தறுத்து கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மயிலாடிக்காட்டைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (52). இவரது மகள் பவித்ரா (21). இளங்கலை 3ம் ஆண்டு படித்துவரும் பவித்ராவை, அவரது சித்தப்பா முறையுள்ள துரைக்கண்ணு (36) என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த, பவித்ராவின் தந்தை பன்னீர்செல்வம், துரைக்கண்ணுவை கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பவித்ராவிற்கு, துரைக்கண்ணு தாலி கட்ட முயன்றுள்ளார். அப்போது, பவித்ரா கூச்சலிடத்தால், அவரது கழுத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து துரைக்கண்ணுவும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

 

Tags :

Share via

More stories