சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

by Staff / 25-02-2023 12:34:59pm
சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது பரமத்திவேலூர், கல்லூரி சாலையில் வசித்து வருகிறார். இவர் பரமத்திவேலூரில் இருந்து ஈரோட்டிற்கு தினமும் காரில் செல்வது வழக்கம்.அதேபோல் நேற்று காலை வங்கிக்கு செல்ல தனது காரில் ஈரோட்டுக்கு பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சுரேஷ் சென்று கொண்டிருந்தார். கபிலர்மலை அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வந்ததை பார்த்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து வேகமாக எரிய தொடங்கியது.உடனடியாக அவ்வழியாக வந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர்.இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் அதிர்ஷ்ட வசமாக காரின் உரிமையாளர் சுரேஷ் உயிர் தப்பினார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் காரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories