ஐஐடியில் பி.டெக் இறுதியாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கவுகாத்தி ஐஐடியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வந்த சூர்ய நாராயண் பிரேம்கிஷோர் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை பற்றி பெற்றோருக்கு ஐஐடி நிர்வாகம் தகவல் அளித்த நிலையில், கவுகாத்திக்கு அவர்கள் விரைந்தனர். மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 10 வருடங்களுக்குள் கவுகாத்தி ஐஐடியில் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 5 வருடங்களில் 14 மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளதும் 2019ல் வெளியான அறிக்கையின் மூலம் தெரியவந்தது.நாட்டில் உள்ள 23 ஐஐடிக்களில் அதிகளவில் மாணவர்கள் தற்கொலை செய்வது கவுகாத்தி ஐஐடி என்பது என்று மத்திய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
Tags :