நன்றி சொன்னால்தான் ஒட்டுக்கேக்க போகமுடியும்- முன்னாள் அவைத்தலைவர்.என் மகளைப்பற்றி முகநூலில் அவதூறாக பதிவுசெய்தார்கள்-மாவட்ட செயலாளர். 

by Editor / 22-09-2024 10:20:43pm
நன்றி சொன்னால்தான் ஒட்டுக்கேக்க போகமுடியும்- முன்னாள் அவைத்தலைவர்.என் மகளைப்பற்றி முகநூலில் அவதூறாக பதிவுசெய்தார்கள்-மாவட்ட செயலாளர். 

 தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பொது உறுப்பினர்கள்ஆலோசனைக் கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று   குத்துக்கல்வலசை S.R.R.திருமண மஹாலில் மாவட்டக்கழக அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், பவள விழாகொண்டாடுவது பற்றியும், கழக மூன்றாண்டு ஆட்சியின் சாதனைக்
குறித்தும், தெருமுனைக் கூட்டம் நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கவும், மாவட்ட துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர், மாநில நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள், அவைத் தலைவர்கள், பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள், சார்பு
அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர,பேரூர் வார்டு செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள்,நிர்வாகிகள், பாக முகவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து
கொண்டனார்.இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அவைத்தலைவரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான முத்துப்பாண்டி கலந்துகொண்டு பேசும்போது;தமிழ்நாடுமுழுவதும் 40 தொகுதிகளில் பெரும்வெற்றிபெற்ற நாம் தென்காசிதெற்கு  மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளிலும் அமோக வக்கிவைத்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்,ஆனால் வெற்றிபெற்ற எம்பியை அழைத்து நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யது வைக்கவில்லை.வெற்றிபெற்ற எம்பி.நன்றி சொல்லவில்லை நன்றி சொல்ல போனால்தான் இனி ஒட்டுக்கேட்டு போகமுடியும். சென்னைக்கு மாவட்ட செயலாளர் சென்றால் கட்சியின் நிர்வாகிகள் சென்னைவந்தால் மாவட்ட செயலாளர் எங்கே தங்கியிருக்கிறார் என்ற தகவல் சொல்லவேண்டும்.என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் ஜெயபாலன்:என்னை புகழ்ந்தவர்களைவிட இகழ்ந்தவர்கள் அதிகம்.கவிதா கோவிந்தன் என்ற பேஸ்பக்கத்தில் மிகவும் அசிங்கமாக பதிவிட்டுவருகிறார்கள் என்னைமட்டுமல்ல அனைவரையும் பதிவுசெய்கிறார்கள்.என்மகளையும் பற்றி தவறாக பதிவு செய்தார்கள்,இதற்கெல்லாம்  அந்தபதிவுகளை மீது நடவடிக்கை எடுக்க புகார் செய்யப்பட்டுள்ளது,அது அரசு வேலை அதனை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்,நான் திமுகவில் இதனையெல்லாம் தங்கி கொண்டு இருக்க காரணம் கலைஞர் மீது வைத்துள்ள பற்றுதான்  காரணம் என நா தழுதழுத்தவாறு பேசியது அனைவரிடமும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.

 

Tags : நன்றி சொன்னால்தான் ஒட்டுக்கேக்க போகமுடியும்

Share via