மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி.

by Staff / 14-10-2022 04:51:30pm
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி.

மதுரை திருப்பரங்குன்றம் வலையபட்டி பெரிய ஆலங்குளத்தை சேர்ந்த பாண்டி மகன் பால் கண்ணன் (29) என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.நாகமலை புதுக்கோட்டை எம். ஜி. ஆர் நகரில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பணியிலிருந்த பால் கண்ணன் மோட்டார் சுவிச்சை போட்ட போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

அவரை மதுரை காமராஜர் பல்கலைக்கழக மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பால் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து மனைவி பழனியம்மாள் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via