குற்றாலம்அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி-எம்.எல்.ஏ ஆய்வு.

by Staff / 23-11-2021 09:27:04pm
குற்றாலம்அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி-எம்.எல்.ஏ ஆய்வு.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட குற்றாலம் அருவிகள் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர் இந்த நிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கடந்த வாரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜை  சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.அதில் குற்றாலத்தை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பத்தினர்  மட்டுமின்றி ஏராளமான சிறுதொழில் புரியும் வியாபாரிகள்,விடுதி பணியாளர்கள்,வாகன ஓட்டிகள் என சுமார் 10 ஆயிரம் பேர்  தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக கூறி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார், இந்த நிலையில் இன்று அவர் குற்றாலம் பகுதியில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார், அவருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்,அவரிடம் குற்றாலத்தில் குளிக்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏராளமான வியாபாரிகள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். விரைவில் குற்றாலத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கான அனுமதியை பெற்று தருவதாக வியாபாரிகள்  மத்தியில் அவர் தெரிவித்தார்

 

Tags :

Share via