அரிதான வைரஸ்.. இங்கிலாந்தில் மருத்துவ அவசரநிலை

by Staff / 28-11-2023 12:24:42pm
அரிதான வைரஸ்.. இங்கிலாந்தில் மருத்துவ அவசரநிலை

ஒரு அரிதான பன்றிக்காய்ச்சல் திரிபு - இன்ஃப்ளூயன்ஸா A(H1N2) - இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற தன்மை கொண்ட வைரஸ் முதன்முறையாக மனிதனிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவர்கள் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. வைரஸின் அறிகுறிகள் தென்பட்டபோது பாதிக்கப்பட்டவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. ஆனால் அவருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.

 

Tags :

Share via