ஊதினால் அணைவதற்கு தீக்குச்சி அல்ல திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

.’ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமில்லை, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி எனக் கூறினார்.வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ‘common DP’-யை வைக்க வேண்டுமெனவும் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Tags : ஊதினால் அணைவதற்கு தீக்குச்சி அல்ல திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்