நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா

by Staff / 08-07-2023 11:13:15am
நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்ததால் நெதர்லாந்து பிரதமர் பதவியை மார்க் திடீர் ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியை மார்க் ராஜினாமா செய்த நிலையில் 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via

More stories

Logo