அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரானிய துறைமுகங்களை சுற்றி முற்றுகை
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்துவதை ஒத்தி வைத்துள்ள நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து கடற்படை முற்றுகை விடுத்துள்ளதாக கூறி ஹோர்முஸ் ஜல சந்தியில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் 17 அன்று இந்த நீரினை முழுமையாக திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்திருந்தது. ஆனால், 24 மணி நேரத்திற்குள்ளேயே ஏப்ரல் 18 அன்று மீண்டும் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரானிய துறைமுகங்களை சுற்றி முற்றுகை ஏற்றுள்ளது என்றும் இது நம்பிக்கை துரோகம் என்றும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் உடனான ஒப்பந்தங்கள் முழுமையாக முடிவடையும் வரை இந்த முற்றுகை தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் பிளாக் மெயில் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நீ ரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரானிய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் ஈரானின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் போர்முஸ் ஜல சந்தி நெருங்கும் கப்பல்கள் எதிரிக்கு ஒத்துழைப்பதாக கருதப்பட்டு இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஜலசந்தியைக் கடக்க முயன்றபோது, இந்தியக் கொடியுடன் சென்ற குறைந்தது இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, புது தில்லி ஈரானிய தூதரை அழைத்துள்ளது.
Tags :



















