அரசு மருத்துவமனைகளில் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை

by Staff / 28-06-2024 03:04:32pm
அரசு மருத்துவமனைகளில் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை

மிக அதிக உடல் எடையுடன் (Morbid Obesity) உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குடலிறக்கம், கல்லீரல் செயலிழப்பு, இதயநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ளோருக்கான உயிர்காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) சென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via