"அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தார் பாமக உடைந்துவிட்டது"

அமித்ஷா முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்தார், அவரது கூட்டணியில் இருக்கும் பாமகவை இரண்டாக உடைந்துவிட்டது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'மகாராஷ்டிராவுக்கு சென்ற அமித்ஷா, சரத் பவாரையும், அவரது தம்பியையும் பிரித்தார். சிவசேனா தலைவர் பால் தாக்கரே குடும்பத்திலும் பிரச்னை வந்தது. ஒவ்வொரு கட்சியாக பிரிப்பதுதான் அவர்களது வேலை. ஆனால், என்ன முயன்றாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது' எனக் கூறியுள்ளார்.
Tags :