ஆசிரியையை கத்தியால் குத்திய கணவர் கைது

by Staff / 07-08-2023 02:13:15pm
ஆசிரியையை கத்தியால் குத்திய கணவர் கைது

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கருமாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 38), பட்டதாரி. இவருடைய மனைவி காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஸ்மிதா (8), வைஸ்னவ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை காயத்ரி குழந்தைகளுடன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்ற ராஜா, அவரது மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளை கருமாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜாவை தேடி வந்தனர். நேற்று குருக்கபுரம் பஸ் நிறுத்தம் அருகே ராசிபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ராஜாவை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ராஜா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories