கருணாநிதி நினைவு தினம் - உதயநிதி ட்வீட்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகளின் சாட்சியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லம் திகழ்கிறது. கலைஞர் அவர்களின் அரசியல் வாழ்வோடு பின்னிப்பிணைந்த கோபாலபுரம் இல்லத்தில், கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மற்றும் கழகத்தின் மூத்த நிர்வாகிகளுடன் மலர்தூவி மரியாதை செய்தோம்” என தெரிவித்துள்ளார்.
Tags :