CBDT தலைவரின் பதவிக்காலம் நீட்டிப்பு

by Staff / 01-10-2023 12:46:54pm
CBDT தலைவரின் பதவிக்காலம் நீட்டிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தாவின் பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இவரது பதவிக்காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் அவரை மேலும் 9 மாதங்களுக்கு அப்பதவியில் தொடர முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. வருமான வரித்துறையின் 1986 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிபிடிடி தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

Tags :

Share via