ஒரே நாளில் 1600 நிலநடுக்கங்கள்
ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்தில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் ரெக் ஜாவிக் நகரில் புதன்கிழமை ஒரே நாளில் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் இதனைத் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. ஐஸ்லாந்து ஆர்க்டிக் வட்டத்தின் எல்லையில் உள்ள வடக்கு அட்லாண்டிக் தீவு நாடாகும். இதற்கு முன்னர், ஏப்ரல் 2010 இல், ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 10 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சிக்கித் தவித்தனர்.Tags :