முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் விசாரணை

by Editor / 06-01-2022 11:32:51am
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர்  விசாரணை

பால்வளத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார் காரணமாக வழக்குபதிவு செய்த போலீசார்  கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில்  நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

 ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ராமகிருஷ்ணன், நாகேஷன்,பண்டியராஜன் ஆகிய 4 பேரையும்  தனிப்படை போலீசார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு  நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை அதிகாரி கணேஷ் தாஸ் தலைமையில் போலீசார் 3 மணி நேரம் தனியாக விசாரணை நடத்தினார்.

பின்னர் அவரிடம் வாக்கு மூலமும் பெறப்பட்டது. அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்களையும் யார் யாரெல்லாம் வேலை வாங்கித்தரக் கோரி அணுகிபணம் கொடுத்தனர்  உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் விசாரித்ததாக தெரிகிறது. மேலும் கடந்த 20 நாட்களாக எங்கெல்லாம் இருந்தார் யார் யாரெல்லாம் உதவியது என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விடிய விடிய இந்த விசாரணை நடைபெற்றது.

விசாரணை அதிகாரியைத் தொடர்ந்து மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் ராஜேந்திர பாலஜியிடம் விசாரணை நடத்தினர்.பின்னர் ராஜேந்திர பாலஜிக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேரிடம் தனித்தனியாகவும் கூட்டாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் கர்நாடகாவில் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யும்போது அவர் தப்புவதற்காக பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து ராஜேந்திரபாலாஜிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனோ பரிசோதனை செய்தனர்.பின்னர் அவரை  ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தினர்..

 

Tags :

Share via

More stories