ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அழகிரி ஆதரவாளர்கள்

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவி ஏற்புக்கு முன்னதாகவே தனது தம்பி முக ஸ்டாலினுக்கு அழகிரி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் இன்று முக அழகிரியின் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் இணைந்த இதயங்களே எனக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது மதுரை திமுகவினர் மத்தியில் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags :