சாலைவசதி இல்லாததால் உடல்நிலை சரியில்லாத ஒருவரை தூளி கட்டி தூக்கி வந்த கிராம மக்கள். வைராலாகும் வீடியோ.

ஏற்காட்டில் இருந்து சுமார் 8கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிகாடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்துவரும் அண்ணாமலை என்பவருக்கு முதுமை காரணமாக நோய்வாய் பட்டதால் அவரை மருத்துமணைக்கு கொண்டு செல்ல ஊர் மக்கள் தூளி கட்டி எடுத்து வந்தனர் இதை வீடியோவாக எடுத்துஅந்த மலைக்கிராமத்தின் அவல நிலை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
பல வருடமாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்டுவதாகவும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிராமத்திற்க்கு செல்லும் சாலையின் குறுக்கே தனியார் எஸ்டேட் உரிமையாளர் அந்த இடம் தனக்கு சொந்தமானது என்று வேலி அமைத்து தடுத்து விட்டதாகவும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஊர் மக்கள் அணைவரது வீட்டின் மேலும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க வயமாட்டோம் என்று கூறியதால் அப்போது அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் மலைக்கிராமத்திற்கு வந்து தேர்தல் முடிந்தவுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்ததாகவும்
அதன்பின்பு இதுவரை யாரும்இந்தமக்களைப்பற்றி நினைப்பதில்லை. இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார்,சேலம் மாவட்டம் ஆட்சித்தலைவர் ஆகியோரிடம் முறையிட்டும் பலனில்லை என்று வேதனை தெரிவிகின்றனர்.
Tags : வைராலாகும் வீடியோ