மொகலே பிரியாணி செய்வது எப்படி?

by Admin / 07-07-2021 05:20:34pm
மொகலே பிரியாணி செய்வது எப்படி?

மொகலே பிரியாணி

தேவை

      பிரியாணி அரிசி – (1/4 படி) ½ லிட்டர்

      மஞ்சள் – 1 டீஸ்பூன்

      கறி – 400 கிராம்

      இஞ்சி – 2 அங்குலத்துண்டு

      புளித்த தயிர் – 1 கப்

      பெரிய வெங்காயம் – 2

      பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி

      பச்சை மிளகாய் – 8

      பூண்டு – 8

      ஏலக்காய், கிராம்பு, பட்டை,

      மல்லி, புதினா, டால்டா அல்லது நெய் – 100 மி.லி

      எலுமிச்சம்பழம்பாதி

 

செய்முறை

        இஞ்சி, பூண்டு, மிளகாய் இவற்றை மற்ற மசாலாப் பொருட்களுடன் அரைக்கவும். கொஞ்சம் தயிரில் அரைத்த விழுதைக் கரைத்து கறித்துண்டுகளுடன் புரட்டி வைக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். ஒரு வாணலியில் 1 டேபிள் நெய்யைக் காய வைத்து அதில் அரிசியைப் பொரித்து தனியாக வைக்கவும். பிரஷர் குக்கரில் நெய்யைக் காய வைத்து வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். தயிருடன் புரட்டிய கறித்துண்டுகளைப் போடவும் 1 கப் தண்ணீர் சேர்த்து பிரஷரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்பு மீதி உள்ள தயிர், இரண்டு பங்குக்கு கொஞ்சம் குறைவான தண்ணீர் (தயிர் சேர்ப்பதால்) சேர்க்கவும். கொதித்த பின் பொரித்து வைத்திருக்கும். அரிசி, தேவையான உப்பு, மல்லி இலை, புதினா இலை இவற்றைப் போடவும். அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விடவும். மீண்டும் பிரஷரில் 8 நிமிடம் வேக விடவும்.

 

 

Tags :

Share via