குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் பாஜக தலைவர்கள் ஆலோசனை
குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்வதற்காக பாஜக உயர்மட்ட தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை மாதம் 25ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அல்லது சரத்பவார் கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளநிலையில் பாஜகவின் உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஜேபி நட்டா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர் சுமார் நான்கு மணி நேரத்தில் மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது ஜூன் 10தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் ஐம்பத்தி ஏழு காலியிடங்களுக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
Tags :
















.jpg)


