உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வு-மேலாளர் மிரட்டல் பேச்சு போலீசார் ஓட்டம்.

by Editor / 21-10-2022 11:39:43pm
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி  திடீர் ஆய்வு-மேலாளர் மிரட்டல் பேச்சு போலீசார் ஓட்டம்.

தென்காசி மாவட்டம் பரோட்டா சால்னாவிற்கு புகழ் போன பிரனூர்  பகுதியில் பல வருடமாக இயங்கி வரும் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் சொகுசு மது பார் மற்றும் உணவகம், சீட்டு கிளப், மீன், சிக்கன் கடை , என மனமகிழ் மன்றத்தின் உள்ளே சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக  200 பேர் அமர்ந்து n மது அருந்தும் வசதியோடு உள்ளது. அரசியல் புள்ளி ஒருவரின் நெருங்கிய உறவினர் பெயரின் செயல்படும் மனமகில் மன்றம் 24 மணி நேரமும் செயல்படுவதாக  கூறபடுகிறது  இதுகுறித்து  அப்பகுதியில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அங்கே சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டதாகவும் பிரம்மாண்டமாக மதுபான பார் செயல்படுவதை கண்டும் சில இடங்களில் துர்நாற்றம் வீசுவதையும் ரசாயனம் கலப்படம் செய்த மீன் வருவல், சிக்கன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் இருப்பதை உறுதி படுத்தி உள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

 

செங்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் உடன் சென்று உள்ளதாக கூறபடுகிறது மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அங்கே நடந்ததை செல் போன் மூலமாக புகைப்படம் எடுத்திருக்கிறார் திடீரென்று அந்த பாரின் உரிமையாளரின் மேலாளர் ஒருவர் கடுமையான சொற்களை பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததாகவும் கூறபடுகிறது மிரட்டல் பேச்சுடன்  பேசிய  நபரை கண்டவுடன் உடனிருந்த போலீசார் ஓட்டம் பிடித்துள்ளனர் எதற்கும்  அஞ்சாமல்  அரசு பணியை சட்டரீதியாக சந்திக்கிறோம்  என்ற வழியில் உணவு பாதுகாப்புத்துறை  அதிகாரி  அந்த கடைக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்  நோட்டீஸ் வாங்க மறுத்த மேலாளர் மிரட்டலாக பேசியுள்ளார்  நோட்டீஸ் வாங்க மறுத்தவுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நோட்டீசை கடையின் சுவரில் ஒட்டி உள்ளார்  . தொடர் மிரட்டலால் நிலைகுலைந்நு போன உணவு பாதுகாப்பு அதிகாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி  திடீர் ஆய்வு-மேலாளர் மிரட்டல் பேச்சு போலீசார் ஓட்டம்.
 

Tags :

Share via