தமிழகம் என குறிப்பிட்டது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

by Staff / 18-01-2023 01:55:35pm
தமிழகம் என குறிப்பிட்டது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

தமிழகம் என குறிப்பிட்டது பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும், அந்தக்காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என்றார். தனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories