அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது.. பாஜகவிற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

மக்களவைத் தொகுதி மறுவரை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது என்று பாஜகவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.நாகப்பட்டினம் அருகே புத்தூரில் திமுக மாவட்டச் செயலாளர் கவுதமன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தி கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி நடைபெறுவதாகவும் கவலை தெரிவித்தார்.
Tags :