டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் பாதுகாப்பு காரணங்களுக்காக தனது விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்ப
டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் பாதுகாப்பு காரணங்களுக்காக தனது விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது..தற்போதைய அசாதாரண சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய விசா விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஏற்கனவே உள்ள விண்ணப்பங்களை பரிசீலிப்பது ஆகிய பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள வங்கதேச தூதரத்தை சுற்றி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..
சிறுபான்மையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற இதன் விளைவாக டெல்லி மட்டமின்றி அகர்தலா மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில் உள்ள வங்க தேச விசா மையங்களும் சேவைகளை நிறுத்தி உள்ளன. முன்னதாக வங்கதேசத்தின் சிட்டகான் நகரில் உள்ள இந்திய விசா மையத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா மூடி இருந்தது. அதனை தொடர்ந்து வங்கதேசமும் இந்த தற்காலிக தடையை விதித்துள்ளது .மறு அறிவிப்பு வரும்வரை இந்த சேவைகள் முடக்கப்பட்டிருக்கும் என்று தூதரகம் அறிவித்துள்ளது..
Tags :













.jpg)




