உணவருந்திய போது உயிரிழந்த புதுப்பெண்

by Staff / 13-07-2023 11:52:03am
உணவருந்திய போது உயிரிழந்த புதுப்பெண் கரூர் பசுபதி பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் கிருபா (25) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் கடந்ததினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். நேற்று மதியம் இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தபோது கிருபாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கைவசம் வைத்திருந்த மாத்திரியை சாப்பிட்டுள்ளார். ஆனால் நிலைமை மோசமானதை தொடர்ந்து, குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் மரணம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். ஏற்கனவே கிருபாவுக்கு மூச்சு திணறல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 

Tags :

Share via