அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்துக் கட்டணம் உயா்வு என்பது தற்போது கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயா்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் புதிதாக 7,500 பேருந்துகள் வாங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
Tags :